இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/15/2014

கல்முனை மாநகரசபையை ஜேர்மன் நியூரோம் வொர்க் சிற்றி நகரத்துடன் இணைத்து அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்பகட்ட செயற்பாடு

-எம்.வை.அமீர்,எ.எம்.சம்சுதீன் -
 
கல்முனை மாநகரசபையை ஜேர்மன் நியூரோம் வொர்க் சிற்றி நகரத்துடன் இணைத்து அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகளின் ஒரு அங்கமாக  கல்முனை மாநகரசபை  எல்லைக்கு உட்பட்ட சாய்ந்தமருதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்இ கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் குழுத்தலைவருமான எ.எம்.ஜெமீல் முயற்சியால் ஏற்கனவே ஜேர்மன் நியூரோம் வொர்க் சிற்றி தலைவரின் அனுசரணையுடன் அல் ஜலால் பாடசாலைக்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்டு தற்போது சுகாதார வைத்திய நிலையமாக இயங்கும் கட்டிடத்தொகுதியை பார்வையிட்டதுடன் நெல்சிப் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சாய்ந்தமருது வீச் பார்க் வேலைத்திட்டங்களையும் பார்வையிட்டனர்.

கிழக்கு சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் குழுத்தலைவருமான எ.எம்.ஜெமீலின் அழைப்பின்பேரில் கல்முனைக்கு வருகை தந்திருந்த ஜேர்மன் நியூரோம் வொர்க் சிற்றி நகரத்தின் தலைவர் அமானோ ஹனீபாவை மாகாண சபை உறுப்பினர் எ.எம்.ஜெமீல் மற்றும் கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் ஆகியோர் வரவேற்று அபிவிருத்தி செய்யப்படவேண்டிய பிரதேசங்களை காண்பித்ததுடன் எதிர்காலத்தில் செய்ய வேண்டிய அவசர அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர் இதன்போது ஜேர்மன் நியூரோம் வொர்க் சிற்றி நகரத்தின் தலைவர் அமானோ ஹனீபாஇ கல்முனை மாநகரசபையை ஜேர்மன் நியூரோம் வொர்க் சிற்றி நகரத்துடன் இணைத்து அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரிவித்தார்.






0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா