இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/15/2014

கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் சம்மாந்துறைமுஸ்லிம் மகளிர் வித்தியாலயத்துக்கு வருகை

-எம்.வை.அமீர்-

கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 வலயங்களிலும் சிறப்பான பிள்ளைநேயப்பாடசாலைகளை தரிசித்து  கள ஆய்வினை மேற்கொள்வதற்காக மாகாண கல்வித் திணைக்களத்தின் ஆரம்பப்பிரிவு பணிப்பாளர் உதயகுமாரின்  தலைமையில் அதிகாரிகள் 2013.03.13 ஆந்திகதி காலை 11.00 மணிக்கு சம்மாந்துறைமுஸ்லிம் மகளிர் வித்தியாலயத்துக்கு  வருகை தந்தனர்.

இவ்விஜயத்தின் போது சம்மாந்துறை வலயத்தின்முன்ணிப் பாடசாலையாக திகழும் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில்பொதிந்துள்ள  'பிள்ளை நேயம்மற்றும் அடைவு மட்டத்தின்' தந்திரங்களை கேட்டறிந்து கொண்டனர்.

இக்குழுவில் மாகாணக் கல்விப் பணிமனையின் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் 17 வலயத்தின் கல்வி அதிகாரிகளும்
இணைந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இக்குழுவினரை இப்பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் வரவேற்றார். மேலும் இப்பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ள அதிபர் சேவையிலுள்ள திருமதி முமு. அஹமட்அவர்களும் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் சார்பாக அதன் பிரதிவலயக்கல்விப் பணிப்பாளர் ளுடுயு. றஹீம் மற்றும் ஆரம்பப் பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் யுடுஆ. காதர் அவர்களும் கலந்து கொண்டனர்.0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா