இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/10/2014

ஜனதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கல்முனையில் பேரணி

-எம்.வை.அமீர்-
அம்பாறை மாவட்ட தமிழ் சிவில் சமூகங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று 2014-03-09 ம் திகதி காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் பேரணி கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமாகி கல்முனை நகர் ஊடாக கல்முனை தரவைக் கோவில் வரை சென்று பின்னர் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் வரை சென்று அங்கு பிரதேச செயலாளர் கே.லவநாதனிடம் மகஜர் ஒன்றை ஒப்படைத்ததுடன் நிறைவடைந்தது.

இங்கு கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட தமிழ் சிவில் சமூகங்களின் ஒன்றியத்தின் செயலாளர் கே.ரமேஷ் இந்த பேரணியானது ஜெனீவா பிரரேணைக்கு எதிரானது அல்ல என்றும் 30 வருட காலமாக யுத்தத்தாலும் 2004 ஆண்டு ஏற்பட்ட சுனாமியாலும் பாதிக்கப்பட்ட தமிழ் சமுகத்தின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு தமிழ் மக்களின் நல்லன்னத்தை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதன் ஊடாக ஜனதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களளுடன் கைகோர்த்து பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதே ஆகும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த கே.ரமேஷ் இப்பிரதேசத்தில் தமிழ் கூட்டமைப்பினர் பிழையான கருத்துக்களைக் கூறி தங்களது பேரணியில் இணைய விடாமல் தமிழ் மக்களை தடுத்து வந்ததாகவும் மக்கள் உண்மையைப் புரிந்து கொண்டு தங்களுடன் ஒன்ரினைந்துள்ளதாகவும் தமிழ் பிரதேசங்களில் அபிவிருத்தி குன்றிப்போனதர்க்கு தமிழ் தேசிய கூடமைப்பினரின் எதிர்கட்சி அரசியலே காரணம் என்றும் தெரிவித்தார்.

இப்பேரணிக்கு ஆண்களை விட பெரும் திரளான பெண்களையே காண முடிந்து. பேரணியில் கலந்து கொண்டவர்களால் ஜனாதிபதிக்கு ஆதரவான கோஷங்களும் முன்வைக்கப்பட்டன.
0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா