இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/10/2014

அரசியலில் இருக்கின்ற தங்களுக்கு மன அழுத்தங்கள் ஏற்படுகின்றபோது எழுத்துத்துறையும் கலைநிகழ்வுகளுமே ஒத்தடமாக அமைகின்றன : ஹரீஸ் MP

-எம்.வை.அமீர்,ஏ.எம்.சம்சுதீன்-
அரசியலில் இருக்கின்ற தங்களுக்கு மன அழுத்தங்கள் ஏற்படுகின்றபோது எழுத்துத்துறையும் கலைநிகழ்வுகளுமே ஒத்தடமாக அமைகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்

நமது பிராந்தியத்துக்கே உரித்தான கலைகளும் எழுத்துத்துறை சார்ந்தோரும் பேணி பாதுகாக்கப்பட வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து வருவதாகவும், அதிகமான நவீனகால இளைஞர் யுவதிகளுக்கு இப்பிராந்தியத்துக்கு சொந்தமான கலைகள் சம்மந்தமான அறிவு அருகி வருவதாகவும் எனவே அவசரமாகவும் அவசியமாகவும் இவைகளை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளில் இதுசார்ந்த அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்டவர்களுடன் தானும் இணைந்து செயட்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

லஸ்டு அமைப்பின்  18 வது ஆண்டு நிறைவையொட்டி 18 நிகழ்வுகளை நடாத்த தீர்மானித்துள்ள நிலையில் இன்று மேற்படி அமைப்பின் சார்பில் வானொலி அறிவிப்பாளரும் முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினரும்,இலக்கிய வாதியுமான மருதூர் ஏ.எல்.எம்.அன்ஸாரின் வழிகாட்டலில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் எம்.எஸ்.காரியப்பர் கேட்போர் கூடத்தில் மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் அவர்களது தலைமைத்துவத்துவத்துடன் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்தி குழுவின்தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாகவும் முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.நிஜாமுதீன் விசேட அதிதியாகவும் முன்னாள் கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வரும் தற்போதைய மாநகர சபையின் உறுப்பினருமான ஏ.ஏ.பசீர் மற்றும் அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் அமைப்பின் செயலாளரும் மாநகரசபையின் உறுப்பினருமான ஏ.எம்.பரக்கத்துள்லாஹ் போன்றோரும் அதிதியாக கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அரசியல் ரீதியாக தாங்கள் சோர்வடையும் போது கலைகள் மற்றும் எழுத்தாளர்கள் தரும் விடையங்களை நோக்குவதன் ஊடாக மன அளுத்தங்களில் இருந்து வெளிவருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் எழுதிய 'இது ஒரு தங்க நூல்' எனும் புத்தக அறிமுகமும் இடம்பெற்றது. இப்புத்தகத்தின் அறிமுகத்தை பிறை எப்.எம்.நிறுவனத்தின் வர்த்தக முகாமையாளர் எஸ்.ரபீக் மேற்கொண்ட அதே வேளை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ் 'இது ஒரு தங்க நூல்' புத்தகத்தின் ஆய்வுரையை வெளியிட்டார்.

இந்நிகழ்வின் போது சிறுவர்களின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்ற அதேவேளை ஊடகவியலார்கள் கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இங்கு ஊடக பயிற்சி பெற்ற இளம் ஊடகவியலாளர்களுக்கான சான்றிதள்களும் வழங்கிவைக்கப்பட்டன.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா