இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/27/2014

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் பாடசாலை அபிவிருத்திக்குழு தெரிவாகியது

-எம்.வை.அமீர்-

நேற்று 2014-04-25ம் திகதி மாலை கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் அதிபர் பீ.எம்.எம்.பதுருதீன் தலைமையில் இடம்பெற்ற பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே மேற்படி பாடசாலைக்கான அபிவிருத்திக் குழுவுக்கான உறுப்பினர்கள், அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டனர்.

சுமார் 2800 மாணவர்கள் கல்விகற்கும் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் பாடசாலை அபிவிருத்திச்சங்கத்துக்கு 48 பெற்றோர்கள் மட்டுமே சங்க அங்கத்துவத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பிரதேசமான சாய்ந்தமருது மற்றும் கல்முனைக்குடி எனும் ஊர்களில் இருந்து சமமாக நான்கு நான்கு உறுப்பினர்களை தெரிவு செய்வது என சபையில் தீர்மானிக்கப் பட்டதன் பயனாக சாய்ந்தமருதில் இருந்து நால்வரும் கல்முனைக்குடியில் இருந்து நால்வரும் தெரிவாகினர்.அதன் அடிப்படையில் :
01. எம்.ஐ. இல்ஹாம் ஜெசில் (பொறியியலாளர்)
02. எம்.ஏ.ரபீக் (நில அளவையாளர்)
03.ஏ.ஏ.பசீர் (மாநகரசபை உறுப்பினர்)
04. எம்.எம். உதுமாலெப்பை (போதனாசிரியர்)
05. எம்.ரீ.இப்ராகிம் (வைத்தியர்)
06. ஏ.வி.எம்.பைசால்
07. ஏ.எல்.எம். சறூக்
08. எஸ்.எம்.எம்.ஜலால்டீன் போன்றோரும் தெரிவாகினர். சுற்றுநிருபத்துக்கு அமைவாக மேற்படி எட்டுப்பேரில் இருந்து எம்.ஏ.ரபீக் (நில அளவையாளர்) குழுவின்செயலாளராக  தெரிவு செய்யப்பட்டார். ஏற்கனவே பாடசாலையில் இருந்து ஆசிரியர் சார்பில் எட்டு உறுப்பினர்கள் தெருவு செய்யப்பட்டிருந்தனர். இதன்படி
01. பீ.எம்.எம்.பதுருதீன் (அதிபர்)
02. எம்.எஸ்.முகம்மத் (பிரதி அதிபர்)
03. ஏ.ஆர்.எம்.யூசுப் (ஆசிரியர்)
04. யூ.எல்.எஸ்.ஹமீட்
05. ஏ.எச்.எம். அமீன்
06. ஆதம்பாவா
07. ரீ. எம். றிபாய்
08. ஏ. வி.சேறோன் தில்ரஸ் போன்றோருடன் பழைய பானவர்களில் இருந்து இருவரும் தெரிவாக வேண்டியுள்ளது.


இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது கோட்ட கல்வி அதிகாரி ஐ.எல்.ஏ.ரகுமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா