-எம்.வை.அமீர்-
சம்மாந்தறைக் கல்வி வலய ஆசிரியர்கள் சங்கத்தின் 01 வது மேதினக் கூட்டம் சம்மாந்துறை தாறுஸஸலாம் மகாவித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் மிகவிமர்சையாக இடம்பெற்றது.
தலைவர் எம்.வை.ஏ.நாசிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிகளவான ஆசிரியர்கள் பங்கேற்ரிருந்தனர்.
இதன்போது தலைவர்,பொதுச்செயலாளர், பொருளாளர் உட்பட பல முக்கிய உறுப்பினர்களின் உரைகள் இடம்பெற்றன.
இன்நிகழ்வின் இறுதியில் பல முக்கிய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன. ஆசிரியர்கள் இடமாற்றங்களனைத்தும் நீதியாகவும் நேர்மையாகவும் இடம் பெறுதல் வேண்டும். ஆசிரியர் இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள் முற்றாக தவிர்க்கப்படல் வேணடும்.இடமாற்றங்களின் போது குறித்த ஆசிரியர் சேவையாற்றும் பாடசாலையின் ஆளனி கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். ஆசிரியர்களின் உரிமைகள் மதிக்கப்படல் வேண்டும். சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகம் அரசியல் தலையீடுகளிலிருந்து விடுபட்டு சுயாதீனமாகவும் தன்னிச்சையாகவும் செயற்படுதல் வேண்டும்.
புதன் கிழமை ஆசிரியர்கள் சந்திப்புக்குரிய தினம் என்பதனால் அன்றைய தினம் வ.க.அலுவலகத்தில் வேறு கூட்டங்கள் நடைபெறுவது தவிர்க்கப்படல் வேண்டும். (ஏனெனில் தூர இடங்களிலிருந்து வருகின்ற ஆசிரியர்கள் தங்களது அலுவல்களை நிறைவேற்றிக் கொள்வதில் சிரமங்களை எதிர் கொள்கின்றனர்) போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.










0 comments:
Post a Comment