இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/05/2014

'மத விவகாரப் பொலிஸ் பிரிவு' தொடர்பான தேசிய ஷூறா சபையின் ஊடக அறிக்கை

2014-04-27
ஊடக அறிவித்தல் :

பௌத்த மத மற்றும் மத விவகார அமைச்சுடன் இணைக்கப்பட்டு 'மத விவகாரப் பொலிஸ்' அலகொன்று அமைக்கப்பட்டுள்ளமைஇ நம் நாட்டின் பொலிஸார் சட்டத்தை பின்பற்றி செயல்படுவதற்கு பதிலாக ஒரு சில பிக்களுக்கும் மத கோட்பாடுகளுக்கும் கீழ் படிந்து செயற்படும் ஒரு நிலைமையையே உருவாக்கும் என தேசிய சூறா சபை கருதுகின்றது.

மாறி மாறி வந்த அரசாங்கங்களின் தீவிர அழுத்தம் காரணமாக பொலிஸார் தமது கடமையை சட்டத்தின் கோட்பாடுகளின் படி மேற்கொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருப்பதை சகலரும் அறிவர். நிலைமை இவ்வாறிருக்கஇ வேறு ஒரு அமைச்சில் சட்டத்திற்கு புறம்பான விதத்தில் மற்றுமொரு பொலிஸ் பிரிவை அமைத்தலானது நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொலிஸாரின் கடமையை மேலும் சிரமமாக்கும்.

நம் நாட்டின் பொலிஸ் திணைக்களமானது பொலிஸ் மா அதிபர் முதற் கொண்டு அதிகாரிகள் வரையான கட்டமைப்பொன்றின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றது. இவர்கள் சட்டமா அதிபர் மற்றும் நீதிமன்றத்தின் வழிநடத்தல் மூலமும்இ பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு உட்பட்டும் செயற்படுவதோடு தமது செயற்பாடுகள் தொடர்பாக பாராளுமன்றத்திற்கு பதில் கூறும் கடப்பாடும் இவர்களுக்கு உண்டு.

ஆனால்இ தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ள மத விவகார பொலிஸின் முக்கிய விடயங்கள் ஒரு சில மதகுருமார்களிடம் கொடுக்கப்பட்டு அது குறிப்பிட்ட ஒரு மதத்தின் கோட்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுமேயானால் அது பொலிஸ் திணைக்களத்திற்கு சாவு மணியாக அமைவதோடு நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் பாரிய பிரச்சினையையும் ஏற்படுத்தும்.

தற்போதுஇ ஒரு சில பிக்குகள் மதத்தின் பெயரால் சட்டங்களை மீறி பல்வேறுபட்ட குற்றச்செயல்களை மேற்கொண்டு வருவதைஇ சட்டம் ஒழுங்கு தொடர்பாக நமது நாடு முகங்கொடுத்து வரும் பாரிய பிரச்சினையாகக் குறிப்பிடலாம். இந்த மதகுருமார்கள்

​ ​தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வருவதுடன்இ பொலிஸார் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத விதத்தில் சில அரச அதிகார பலமுள்ளவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மேற்படி குழப்பங்களை விளைவிப்பவர்கள் ஏற்கனவே அனுபவித்து வரும் சட்டவிரோத வரப்பிரசாதங்களைஇ புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதப் பொலிஸ் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாமல் மேலும் பிரச்சினை பலம் பெரும் என்றே தேசிய சூரா சபை அஞ்சுகின்றது.

நாட்டில் தற்போது மத ஒற்றுமை இருப்பதாக அண்மையில் இடம் பெற்ற ஊடக ஆசிரியர்களுடனாக சந்திப்பொன்றின்போது அதிமேதகு ஜனாதிபதி கூறினார். ஒரு சில தீவிரவாதிகளின் வன்முறைச் செயல்களைத் தவிர்த்து நோக்கும் போது மேற்படி கூற்று ஓரளவு உண்மையானதே. இருப்பினும்இ அவசர அவசரமாக மத விவகார பொலிஸ் பிரிவொன்றை அமைத்திருப்பதுஇ நாட்டில் இத்துறையில் ஏதோ மோசமான நிலையொன்று உருவாகியுள்ளது என்ற செய்தியை உலக நாடுகளுக்கு அனுப்பலாம். இதற்கு பதிலாகஇ அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் அடிக்கடி கூறுவதைப் போல மதகுருமார் உட்பட எவருக்கும் சட்டத்தை தம் கையில் எடுக்கும் உரிமை கொடுக்கப்பட மாட்டாது என்ற கூற்றை செயலில் காட்டிய வண்ணம்இ தீவிரவாதப் போக்கில் செயற்படுகின்ற ஒரு சிலருக்கெதிராகவேனும் கடும் நடவடிக்கை எடுப்பது மேலும் அதிகம் பயன் தரும். இல்லையாயின்இ நமது தாய் நாட்டின் நிலை இன்னும் மோசமடைவதை தவிர்க்க முடியாமல் போய் விடலாம் என நாம் அஞ்சுகிறோம்.

இஸ்மயில் ஏ. அஸீஸ்
பொதுச்செயலாளர்
தேசிய சூரா சபை

மேலதிக விபரங்களுக்கு சபையின் தலைவர் திரு. தாரிக் மஹ்மூத் (0777304512) அல்லது

​​செயலாளர் நாயகம் திரு. இஸ்மயில் ஏ. அஸீஸ் (0773451544) தொடர்பு கொள்ளவும்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா