இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/05/2014

மத்தியமுகாமில் உணவு நஞ்சானதில் 55 பேர் வைத்தியசாலையில் அனுமதி

-எம்.ஐ.சம்சுதீன்,எம்.வை.அமீர்-

மத்தியமுகாம், 4ம் கொலனியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது பரிமாறப்பட்ட உணவு  நஞ்சானதில் சுமார் 55 பேர் கல்முனை வடக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் பரிமாறப்பட்ட ஐஸ் கிரீம்மை உண்டதன் பின்னரே தாங்கள் இவ்வாறான உபாதைக்கு உட்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.
இன்று (2014-05-03) மாலை 6.50 மணிமுதல் 9.30 மணிவரையும் பாதிக்கப்பட்ட நேயாளர்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டதாகவும் இதில் 18சிறுவர்களும் 37 க்கு மேற்பட்ட பெரியவர்களுமாக அனுமதிக்கப்பட்டதாகவும், வைத்திய தாதிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் இருக்கின்ற போதிலும் சில தாதிகள் முன்வந்து இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கொண்டிருப்பதாகவும் கல்முனை வடக்கு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா