(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட சம்மாந்துறை, கல்லரச்சல் ,மல்வத்தை
மற்றும் சென்நெல் கிராமம் போன்ற பிரதேசங்களில் 'தவிசாளர்
புலமைப்பரிசில்-2014' மற்றும் நெனசல அறிவகங்களில் கற்ற 340ற்கும் மேற்பட்ட
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் சம்மாந்துறை அப்துல் மஜீத்
மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(30) நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபை
தவிசாளர் ஏ.எம்எம்.நௌஷாத் தமைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நெனசல
அறிவகங்களில் தகவல் தொழில்நுட்ப ஆங்கில மொழி கற்கை நெறியினைக் கற்ற
மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்சிகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் ரியட் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம்,
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சுர்,அம்பாறை மாவட்ட உதவி
உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத், சம்மாந்துறை வலயக் கல்விப்
பணிப்பாளர் எம்.என்.நஜீம், சம்மாந்துறை பிரதேசசபை செயலாளர் ஏ.ஏ.சலீம்,
சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.
0 comments:
Post a Comment