(எம்.பீ(B).சப்னி)
அட்டாளைச்சேனைப்
பிரதேச சபையின் நிதியில் இருந்து கோணாவத்தைக் கடற்கரையில் மக்கள் செறிந்து
வாழும் பகுதியில் சிறுவர் பூங்கா ஒன்று அமைக்கும் பணி இன்று (4) காலை
ஆரம்பமானது.
பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைசின் கோரிக்கைக்கு
அமைவாக இந்த சிறுவர் பூங்காவிற்கு தவிசாளர் எம்.ஏ.அன்சில் பிரதேச சபையின்
நிதியில் இருந்து 1.5மில்லியன் ஒதுக்கீடு செய்து அதன் ஆரம்ப கட்ட வேலைகள்
இன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், தவிசாளர்
எம்.ஏ.அன்சில், உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம். உவைஸ் மற்றும்
ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைத்தனர்.
0 comments:
Post a Comment