இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/26/2014

5000 முஸ்லிம் பொலிசாரை நியமித்து முஸ்லிம் பிரதேசங்களை பாதுகாக்க வேண்டும் பத்திரகையாளர் மாநாட்டில் பாராளமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்

-எம்.வை.அமீர்-

 

அளுத்கமதர்ஹாநகர்பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் அண்மையில் பொதுபலசேன மற்றும் சிங்கள தீவிரவாதிகளால் அப்பாவி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட  இனவெறித் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அமைதியின்மை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கல்முனையில் புதன்கிழமையன்று நடாத்த திட்டமிட்டிருந்த துஆ பிரார்த்தனை மற்றும் கண்டன பேரணிக்கு பொலிஸ்மா அதிபரின் துண்டுதலின் காரணமாக நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பக்கப்பட்டுள்ளது சம்மந்ததாகவும், கல்முனை அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் ஊடகங்களுக்கு தெளிவு படுத்தும் ஊடக சந்திப்பு இன்று (2014-06-24)  பாராளமன்ற உறுப்பினரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது சிரேஷ்ட சட்டத்தரணியும் உயர்பீட உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேசசபை எதிர்கட்சி தலைவருமான எஸ்.எம்.எம்.முஸ்தபா மற்றும் பாராளமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் ஜின்னா மாஸ்ட்டர் உட்பட பெரும் திரளான ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ்

அதி தீவிர போக்கைக் கொண்ட பொதுபலசேன போன்ற அமைப்புக்களின் வருகையைத் தொடர்ந்து மிகவும் ஐக்கியமாக வாழ்ந்த சிங்கள மக்களிடம்முஸ்லிம்கள் தொடர்பான பல்வேறுபட்ட உண்மைக்குப் புறம்பான விடயங்களை கூறி அவர்களை அப்பாவி முஸ்லிம்களுடன் மோத வைக்கின்ற கைங்கரியம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக இங்கு வாழும் முஸ்லிம்கள் மிகந்த அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதன் தொடராக தம்புள்ளை தொடக்கி அளுத்கமதர்ஹாநகர்பேருவளை மற்றும் பெலிப்பன்னை மற்றும் ஏனைய இடங்களில் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு அங்கு கோடிக்கணக்கான பொறுமதி மிக்க சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் உயிர்களும் காவு கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறான அச்சநிலையை போக்க முஸ்லிம் அமைச்சர்களும் பாராளமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்து முஸ்லிம்களில் இருந்து 5000 முஸ்லிம் பொலிசாரை நியமித்து முஸ்லிம் பிரதேசங்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறான பொலிசாரை நியமித்து சிங்கள பெரும்பான்மை பொலிசாருடன் இணைத்து கடமையில் ஈடுபடுத்துவதன் ஊடாக பெரும்பான்மையினரின் சந்தேகத்தை போக்கி சுமுகமாக வாழ வழிசமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அளுத்கமதர்ஹாநகர்பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் அண்மையில் பொதுபலசேன மற்றும் சிங்கள தீவிரவாதிகளால் அப்பாவி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட  இனவெறித் தாக்குதலைத் தொடர்ந்து உடனடியாக முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் உள்ளிட்ட குழுவில் தான் உட்பட அதிகாலையே குறித்த பிரதேசங்களுக்கு விஜயம் செய்ததாகவும் நிலைமையை நேரடியாக கண்டபோது தங்களை அறியாமலேயே கண்கள் குழமானதாகவும், நமது நாட்டின் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் முன்னிலையிலேயே கொடூரங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த பிரதேச மக்களின் பொருளாதரத்தை நசுக்கும் தீவிரவாதிகளின் ஒரு முன்னெடுப்பாகவே தான் இதனை பார்ப்பதாகவும் பாரளமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கண்ணும் மனமும் உருகிய நிலையிலேயே கருத்துக்களை வெளியிட்டார்.

அளுத்கமதர்ஹாநகர்பேருவளை மற்றும் பெலிப்பன்னை சம்பவங்களிலும் தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதல் தொடக்கி இன்றுவரை இடம்பெறும் முஸ்லிம்களுக்கு எதிரான எல்லா தாக்குதல்களின் பின்னும் பொதுபலசேன மற்றும் சிங்கள தீவிர அமைப்புக்கள இருப்பதை முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தி வருவதாகவும் முஸ்லிம்களின் பாதுகாப்பு விடையத்தில் பல்வேறுபட்ட நகர்வுகளை செய்துவருவதாகவும் இதன் ஒருகட்டமாக முஸ்லிம்களின் பாதுகாப்பை வலியுறுத்தி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் பொருட்டு அரசுக்கு முக்கியத்துவம் மிக்க பாராளமன்ற பிரரேணை ஒன்றுக்கு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிக்காது விட்டதாகவும், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் பொருட்டு முஸ்லிம் நாடுககளின் துதுவர்களை தெளிவு படுத்திவருவதாகவும்தெரிவித்தார்.

வன்செயல்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது ஊரடங்க சட்டத்தை பிறப்பித்து முஸ்லிம்களை மட்டும் முடக்கிவிட்டு அல்லது அவர்களை காடுகளுக்குள் துரத்திவிட்டு தீவைப்பு மற்றும் கொள்ளையடிப்பு நிகழ்வுகளை நடத்தி இருந்ததை தங்கள் அதிகாலையிலேயே அங்கு சென்ற போது அறிய முடிந்ததாகவும் பொதுபலசேனவின் இவ்வாறான காடைத்தனங்களை முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

பொதுபலசேன அமைப்பானது பயங்கரவாத பொலிசாக சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நாட்டில்  முஸ்லிம்களை இன சுத்திகரிப்பு செய்து கொண்டு அதனுடாக கிடைக்கும் தீவிர போக்குக் கொண்ட சிங்கள மக்களின் ஆதரவை பெற்று அரசாங்கத்தை தடுமாற வைக்க முற்படுவதாகவும் குறித்த பொதுபலசேனவின் செயற்பாட்டுக்கு அரசாங்கத்தின் உயர் மட்டத்தின் கைகளும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஜனாதிபதி, முஸ்லிம்கள் காத்தான்குடியில் கொல்லப்பட்டபோதும் யாழ்ப்பானத்தில் இருந்து வெளியேற்றிய போதும் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்காத்தவர்கள் தற்போது ஹர்த்தால் அனுஷ்ட்டிகின்றார்கள் என்று தெரிவித்த கருத்தை வன்மையாக நிராகரித்த பாராளமன்ற உறுப்பினர் ஹரீஸ் முஸ்லிம்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்ட போதெல்லாம் தங்களது எதிர்ப்பை சாத்வீக ரீதியில் கறுப்பு வெள்ளி போன்ற பல்வேறுபட்ட நிலைகளில் வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.

தான் ஒரு அரசாங்க பாராளமன்ற உறுப்பினராக இருக்கின்ற போதிலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக பார்த்த மாத்திரத்தில் உடனடியாக சாத்வீக போராட்டத்துக்கு மக்களை அழைத்ததாகவும் அதன் எதிரொலியாக கல்முனை சம்மாந்துறை அட்டாளைச்சேனை உட்பட நாட்டின் முஸ்லிம்கள் செறிந்து வாழும் எல்லாப் பிரதேசங்களிலும் ஹர்த்தாலும் கடையடைப்புக்களும் இடம்பெற்றதாகவும் தற்போது எழுந்துள்ள தேவை குறித்த போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வராது, ஏனைய பிரதேசங்களை பாதுகாப்பது என்றால் முஸ்லிம்களது ஒற்றுமையை இந்த நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு இருப்பதாகவும் பாரிய அகிம்சை போராட்டம் ஒன்றை முஸ்லிம்கள் அதிகமாக வாழும் அம்பாறை மாவட்டத்தில் திங்கட்கிழமை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு பாராளமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் பொலிசாரின் அனுமதியுடன் குறித்த அகிம்சைப் போராட்டத்தை கல்முனைக்குடி முகைதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்னால் நடாத்த இருந்ததாகவும் அதற்க்கு செவ்வாய்க்கிழமை கிழமை நடத்த பொலிசார் தரப்பில் அனுமதி கிடைத்த போதும் பின்னர் அரச புலனாய்வு பிரிவின் தூண்டுதலால் அதுவும் தடுக்கப்பட்டதாகவும் புதன்கிழமை நடாத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ள நிலையில் பொலிஸ்மா அதிபரின் துண்டுதலின் காரணமாக அதற்கும் நீதிமன்றத்தின் ஊடாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கண்டியில் பொதுபலசேனவின் ஒன்று கூடலுக்கு அனுமதியளித்துள்ள பொலிஸ்மா அதிபர் மக்கள் பிரதிநிதியான என்னுடைய துஆ பிரார்த்தனையுடன் கூடிய நிகழ்வுக்கு தடை விதித்துள்ளதையிட்டு வேதனையடைவதுடன் அவரது பக்கச்சார்பான இவ்வாறான நிலையை மிகவும் கண்டிப்பதாகவும் தெரிவித்தார். இருந்த போதும் பொலிஸ்மா அதிபரின் இவ்வாறான போக்கை கருத்தில்கொண்டு பின்வாங்கப் போவதில்லை இன்னும் ஓரிரு தினங்களில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள புத்திஜீவிகள் இளைஞர்கள் பெரியவர்களை சந்தித்து ஏதோ அமைப்பில் சந்தித்து எதிர்காலத்தில் சமுகத்தை பாதுகாப்பது விடயத்தில் எங்களது பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது சம்மந்தமாக தெளிவுட்ட இருக்கின்றேன் என்றும் கூறினார்.

முஸ்லிம்களின் அமைதியின்மையை போக்க அரசுடன் இருக்கின்ற பாராளமன்ற உறுப்பினர்களின் அழுத்தங்கள் போதாமல் இருப்பதாக தெரிவித்த பாராளமன்ற உறுப்பினர் அவர்கள் விரைந்து செயட்படவேண்டியத்தன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா