இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/13/2014

இன்னும் சில வருடங்களில் சாய்ந்தமருது கொங்கிரீட் காடாக மாறிவிடும் டாக்டர் எஸ்.நஜிமுடீன்


-எம்.வை.அமீர்-
சாய்ந்தமருதில்  ஒருகாலத்தில் தென்னைமரங்கள் இருந்தன பலாமரங்கள் இருந்தன பூசனைமரம்,வேப்பைமரம் வாழைமரம் என எத்தனையோ மரங்கள் இருந்தன. அவ்வோளையில் அப்போது வாழ்ந்த மக்கள் சுதந்திரமாக ஓடி விளையாட இடங்கள் இருந்தன அந்த நேரத்தில் அவர்களிடம் நோய்கள் மிகக்குறைந்த அளவிலேயே இருந்தன என்று முன்னாள் பிரதி DPDH உம் சாய்ந்தமருது வைத்தியசாலையின் முன்னாள் DMO வுமான டாக்டர் எஸ்.நஜிமுடீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அல்அமானா நற்பணி மன்றத்தின் ஒன்பதாவது வருடாந்த நிறைவு நிகழ்வு (2014-06-08)சாய்ந்தமருது லீமெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் அல்அமானா நற்பணி மன்றத்தின் தலைவர் ஏ.எல்.ஏ.பரீட் தலைமையில் இடம்பெற்றது. தொடர்ந்து உரையாற்றிய  இந்நிகழ்வின் விசேட அதிதியாக கலந்து கொண்ட டாக்டர் எஸ்.நஜிமுடீன் இப்போது மக்கள் தொகையும் அதிகரித்துச் செல்கின்றன. கடந்த 2004ல் இடம்பெற்ற சுனாமி கடல் பேரலைகளின் காரணமாக பிரதான வீதியில் இருந்து ஒரு கிலோமீட்டராக இருந்த மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிய எல்லை 750 மீற்றருக்கும் குறைந்து விட்டது தங்களது வாழ்வாதாரம் சாய்ந்தமருது பிரதேசத்தை அண்டியதாக இருப்பதால் மக்கள் இப்பிரதேசத்திலேயே வாழ விரும்புகின்றனர். இதனால் மரம் செடி கொடிகள் காணப்பட்ட இடங்கள் எல்லாம் மாடிக்கு மேல் மாடியாக கொங்கிரீட் கட்டிடங்கள் முளைத்துக்கொண்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய டாக்டர் எஸ்.நஜிமுடீன் கட்டிடங்கள் பெருகியுள்ளதால் நாங்கள் சுவாசிப்பதற்கு சிறந்த காற்றை பெறமுடிவதில்லை அத்துடன் மக்களின் கழிவுகள் நிலத்தில் செலுத்தப்படுவதால் நிலமும் மாசடைந்துவருகின்றது என்றும் தெரிவித்தார்.

இவ்வாறான பிரட்சினைகளுக்கு உடனடியாக தீர்வு ஒன்றை பெற வேண்டியது அவசரமானதும் அவசியமானதுமாக இருப்பதாகவும் இப்பிராந்திய மக்களின் நிலத்தட்டுப்பட்டை நிவர்த்திப்பதில் கல்முனை அபிவிருத்திகுழுவின் தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் பங்கு மிகமுக்கியமானது என்றும் தெரிவித்தார். அதிக விலை கொடுத்து காணிகளை வாங்க முடியாமல் தங்களிடமுல் குமார் பெண் பிள்ளைகளை திருமணம்முடித்துக்கொடுக்க முடியாது ஏழைப்பட்ட மக்கள் திண்டாடுவதாகவும் இவ்வாறான பிரட்சினைகளில் இருந்து விடுபட சாய்ந்தமருது கல்முனைக்குடி போன்ற பிரதேசங்களின் மேற்கே சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நெற் செய்கைக்கு உதவாத காணிகளை அவர்களாகவே மூடி அந்நிலங்களில் சிறு வீடுகளையும் மேட்டு பயிர் செய்கைகளையும் மேற்கொள்ள பாராளமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களும் இதனோடு சம்மந்தப்பட்டவர்களும் கஷ்ட்டப்படும் இம்மக்களுக்காக உதவ முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


அவசரமாக சாய்ந்தமருது கல்முனைக்குடி மக்களின் காணிப்பிரட்சினை தீர்க்கப்பாடாது இழுத்தடிக்கப்ப்படுமாக இருந்தால் இப்பிராந்தியம் கொங்கிரீட் காடாக மாறி இங்கு வாழும் மக்கள் நோயினாலும் மீண்டுமொரு சுனாமி மீதமுள்ள எங்களையும் காவு கொண்டு விடுமோ என்ற மன நோயினாலும் பாதிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா