இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/17/2014

சம்மாந்துறை SECPA சமூக கல்வி கலாச்சார மேம்பாட்டு ஒன்றியத்தின் இப்தார் நிகழ்வு


சம்மாந்துறை SECPA சமூக கல்வி கலாச்சார மேம்பாட்டு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித றமழான் மாதத்திற்கான இப்தார் நிகழ்வு இன்று 2014.07.17ம் திகதி அல்- அறபா பள்ளிவாசலில் மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அமைப்பின் ஸ்தாபத் தலைவர், தலைவர், செயலாளர், பொருளாளர், அமைப்பின் உறுப்பினர்கள் மற்று பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள், பள்ளி நிருவாக சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. இப்பிரதேசம் பின் தங்கிய பிரதேசமாகவும், இயல்பு வாழ்க்கை குறைவான பிரதேசம் என்பதும் முக்கிய அம்சமாகும். 
இவ்வாறு வறிய மக்கள் வாழும் பிரதேசங்களில் சென்ற றமழான் மாதத்திற்கான இப்தார் நிகழ்வு முனீர் பள்ளிவாசலில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா