இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/02/2015

நீண்ட அமைதிக்கு காரணம் உண்டு சம்மாந்துறையில் ஹக்கீம் (Photos)

(எம்.ரீ.எம்.பர்ஹான்)

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஜனாதிபதித்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்;பாக நீண்ட அமைதியை மேற்கொண்டது தொடர்பாக மக்கள் பல விசனங்களை தெரித்து வந்தார்கள். இது தொடர்பாக இன்று சம்மாந்துறை விளினயடி சந்தியில் இடம் பெற்ற பொதுக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னால் அமைச்சருமான றவூப் ஹக்கீம் கருத்து தெரிவிக்கையில்..

இலங்கையில் பொரும்பான்மை முஸ்லீம்களின் ஆதரவைப்பெற்ற கட்சியாகிய ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் நீண்ட அமைதிக்கு காரணம் கட்சி உறுப்பினர்களை கட்சியை விட்டு பிரிந்து செல்லாமல் காப்பதற்காக அமைந்தது என அவர் குறிப்பிட்டார்.

மேலும் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்

மக்களின் விடிவிற்க்hக தோற்றம் பெற்ற இக்கட்சி மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக முடிவெடுப்பது என்பது ஆபூர்வத்திலும் அபூர்வமாகும். இன்று அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் பற்றி தப்பான இனவாத கருத்துக்கள் விதைக்கப்படுவதாகவும் இது அரசாங்கத்தின் வங்குரோத்து அரசியலை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை முன்னால் சுகாதார அமைச்சருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில் பாராளமண்ற உறுப்பினர்களான ஹரீஸ், பைசல் காசீம் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா