அம்பாறையின் சில பகுதிகளில் இன்று திங்கட்கிழமை காலை தொடர் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறையின் வதினகல, தேவலகந்த, தமண ஆகிய பகுதிகளிலேயே இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இன்றையதினம் காலை 9 மணியளவிலும் பின்னர் 10.15 மணியளவிலும் நில அதிர்வுடன் பாரிய சத்தங்களைக் கேட்டதாக அந்தப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் நடத்திய ஆய்வில், அப்பாறையில் முன்னர் உண்டான நில அதிர்வு மனித நடவடிக்கைகளினால் உண்டானது என அறிவித்திருந்தது.
இன்று காலை உணரப்பட்ட இந்த நில அதிர்வு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் என்.பி.விஜேயானந்த கூறினார்.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment