தாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள்
பெண்கள் அணியும் நவநாகரிக ஆடைகளுக்கான விற்பனையை ஊக்குவிக்க அந்த ஆடைகளை அணிந்து புகைப்படங்களுக்குக் காட்சியளித்து 75 வயது தாத்தா ஒருவர் வியப்பில் ஆழ்த்திய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
குவாங்சொயு நகரைச் சேர்ந்த மடிககா எனச் செல்லமாக அழைக்கப்படும் லியு கியென்பிங்க் என்ற வயோதிபரே இவ்வாறு பெண்களின் ஆடைகளை அணிந்து புகைப்படங்களுக்குக் காட்சியளித்துள்ளார்.
அவரது பேத்தியான லு ரிங்கும் (24) அவரது நண்பிகளும் இணையத்தளம் மூலமாக தம்மால் நடத்தப்பட்டு வந்த நவநாகரிக ஆடைகளின் விற்பனையை ஊக்குவிக்க, அவற்றை மொடல் அழகிகளுக்கு அணிவித்துப் புகைப்படம் எடுத்து வெளியிட ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
ஆனால் இறுதி நேரத்தில் அந்நிகழ்ச்சி இரத்தாகியதால் லியு கியென்பிங்க் பேத்தியின் ஆடைகளை அணிந்து காட்சியளித்து பார்வையாளர்களை ஈர்க்க முடிவெடுத்தார்.
அவரது முயற்சி பெருந்தொகையான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதால் தனது முயற்சியைத் தொடர அவர் முடிவெடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment