15 வயதான சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாகக் கூறப்படும் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அம்பாறை, கல்முனைப் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கல்முனைப் பொலிஸார் தெரிவிக்கையில்,
இச்சிறுமியை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு அழைத்துச்சென்ற உறவினரான இந்நபர், அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக சிறுமியின் பெற்றோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சிறுமி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.
இதனையடுத்து சந்தேக நபரை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment