இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/11/2012

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புவியியல் தகவல் தொழிநுட்ப பயிற்சி திட்டம்



இப்பயிற்சி நெறியானது இன்று 11ம் திகதி தொடக்கம் 16ம் திகதி வரையான 06 நாட்களைக் கொண்டதாகும்.

இப்பயிற்சியானது புவியியத்துறை சிரேஸ்ட விரிவுரையாளரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான கலாநிதி எம்.ஐ.எம்.கலீல் தலைமையிலும், புவியியத்துறை தலைவர் எம்.எல்.பௌசுல் அமீரின் வழிகாட்டலிலும், விரிவுரையாளர்களான எம்.எச்.எம்.றினோஸ் மற்றும் ஐ.எல்.எம். சாஹீர் ஆகியோரின் நெறிப்படுத்தலிலும் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்வானது இன்று (11) கலை கலாச்சாரபீட கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது பிரதம விருந்தினராக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் கலந்து கொண்டதோடு பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார், வர்தக முகாமைத்துவ பீடாதிபதி சரினா கபுர், பல்கலைக்கழக பதில் நூலகர் எம்.எம். றிபாகுடீன் மற்றும் விரிவுரையாளர்கள் பயிலுனர்களும் கலந்து கொண்டனர். 






0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா