இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/12/2012

பரீட்சை எழுதிவிட்டு வந்த மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பிரதேசத்தில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பியிருந்த மாணவி நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ரி.வினோதினி (16) என்ற மாங்காடு பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை பரீட்சைக்குச் சென்று திரும்பிய வினோதினி வீட்டில் படித்தக் கொண்டிருக்க வீட்டார் வெளியில் சென்று திரும்பி வந்து பார்க்கையிலேயே இம் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா