இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/11/2012

அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அனுசரணையுடன் ஆறுமுகநாவலர் விழா

ஹனீபா
அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு இந்துமாமன்றத்தினர் நடாத்திய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் விழாவும் இந்து எழுச்சி மாநாடும் நேற்று திங்கட்கிழமை ஆலையடிaவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.


தலைவர் வே.சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  



ஆலையடிவேம்பு இந்துமாமன்ற கட்டடத்தில் நடைபெற்ற பூஜையினை தொடர்ந்து நாவலர் அறநெறிப் பாடசாலையினை நல்லை ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளர் திரு.கலாநிதி முத்தையா கதிர்காமநாதன், சைவஞானபானு செஞ்சொற்சொல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் ஆகியோர் திறந்து வைத்தனர்.



இதனைத் தொடர்ந்து இந்துமாமன்ற கட்டிடத்தில் இருந்து ஆரம்பமான எழுச்சி ஊர்வலமானது நாவலருடைய சிலையினை தாங்கிய ஊர்தியுடன் கலாசார மண்டபத்தை சென்றடைந்தது.



இதன்போது, ஆறுமுகநாவலரைப் பற்றிய சமய சொற்பொழிவுகள் மற்றும் அதிதிகளை கௌரவிக்கின்ற நிகழ்வு புலமைப்பரிசில் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்ற பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன.



இந்நிகழ்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பேராசிரியர் சி.பத்மநாதன் விடைக்கொடிச்செல்வர் சி.தனபாலா, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம் இறைபணிச் செம்மல் த.கையிலாயபிள்ளை உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா