மாவனல்லை, ஹிந்குலோயா மஸ்ஜிதுல் ஹுதா புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்வதற்காக தொகுதி வாரியாக கடந்த இரு வாரங்களாக நடாத்தப்பட்டு வந்த தேர்தல்கள் இறுதி முடிவுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.
மொத்தமாக 29 பேர் கொண்ட நிர்வாக சபைக்கு 19 அங்கத்தவர்கள் தொகுதி வாரியாகவும், 05 அங்கத்தவர்கள் தேசியப் பட்டியல் நியமனத்தின் மூலமும் தெரிவு செய்யப்பட, மீதி 05 அங்கத்தவர்களாக பிரதேச தக்கியாக்களின் தலைவர்கள் நியமனம் பெறுவார்கள். இத்தெரிவுகள் மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை மேற்கொள்ளப் படுகின்றன.
08 அங்கத்தவர்கள் தொகுதி வாரியாக வழமை போன்று போட்டியின்றி தெரிவு செய்யப் பட்டிருந்த நிலையில், மிகுதி 11 அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக மாவனல்லை வரலாற்றில் முதல் தடவையாக 09 தொகுதிகளுக்கு தேர்தல்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் பெலிகம்மான, முருத்தவல ஆகிய தொகுதிகள் இரட்டை அங்கத்தவர் தொகுதிகள் ஆகும்.
மும்முரமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்ட நிலையில், பெருமளவு மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்புகளில் கலந்து கொண்டனர்.
11 அங்கத்தவர்களைத் தெரிவு செய்வதற்காக தேர்தல்கள் நடைபெற்ற பெலிகம்மன(2), அடுவாவெல, உயரக்கடை, ஹோந்தெனிகொட, மாறாவ கெடதெனிய, கெரமினிய, கல்கந்தை வல்பொல்தெனிய, முருத்தவலை(2), ஓவத்தை ஆகிய ஒன்பது தொகுதிகளிலும், ஜமாத்தே இஸ்லாமி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களான சகோதரர்கள் முஹமத் ஸவாஹிர், அப்துல் ஹமீத், அரபாத் அக்ரம், செய்யத் நிஹ்மதுல்லாஹ், ஜலால் உஸ்ஸேன், முஹமத் யாஸீன், கப்பார் கான், முஹமத் முஸம்மில், பைசர் அப்துல் குத்தூஸ், முஹமத் மாஹிர், ரியாஸ் ராபி ஆகியோர் முறையே வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கான வரவேற்பு வைபவம் ஒன்று எதிர்வரும் 17.12.2012 திங்கட் கிழமை மாலை, மாவனல்லை ஜமாத்தே இஸ்லாமியின் வளவ்வத்தை கேட்போர் கூடத்தில், மத்திய பிராந்திய பிரச்சாரப் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் பர்ஹான் சுல்தான் அவர்களின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை (19.12.2012) அன்று மஸ்ஜிதுல் ஹுதா அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், தேசியப் பட்டியல் அங்கத்தவர்கள் குறித்த முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
தகவல் : முஹமத் முஸம்மில்
மஸ்ஜிதுல் ஹுதா நிர்வாக சபை அங்கத்தவர்
கல்கந்தை வல்பொல்தெனிய தொகுதி
0 comments:
Post a Comment