இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/17/2012

அம்பாறையில் மினி சூறாவளி

அம்பாறை மாவட்டத்தில் வீசிய பலத்த காற்றினால் கரையோரப் பிரதேசங்களிலுள்ள கட்டங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் கல்முனை, மருதமுனை  உள்ளிட்ட கரையோரப் பிரதேசங்களிலும் மாவடிப்பள்ளி முதலான பகுதிகளிலும் கட்டங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

கல்முனையிலுள்ள அல்ஹாமியா அரபுக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்று முழுமையான சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. தற்போது அப்பகுதிகளில் கடும்  மழையுடன் பலத்த காற்றும் வீசிவருகின்றது. 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா