மட்டக்களப்பு பட்டிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா பிரதேசத்திலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள மரமொன்றில் இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்டவர் காஞ்சிரங்குடாவைச் சேர்ந்த 22 வயதுடைய ப. ஜெகன் என அடையாளஙம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, வீட்டில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தூக்கில் தொங்கியிருக்கலாமென முதல்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பட்டிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment