இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/12/2012

மனித உரிமை தொடர்பான விளிப்புணர்வுச் செயலமர்வு

(ஹனீபா)

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை கோல்டன் சிட்டி லயன்ஸ் கழகத்தின் அனுசரனையூடன் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமை தொடர்பான விளிப்புணர்வுச் செயலமர்வு இன்று (12) சம்மாந்துறைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் எம்.சறுhக் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை கோல்டன் சிட்டி லயன்ஸ் கழகத்தின் தலைவர் எஸ்.எம்.இப்றாலெப்பை, செயலாளர் ஏ.ஆர்.எம்.சர்ஜூன், சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க, சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.மஹ்றுhப், மனித அபிவிருத்தி தாபனத்தின் இணைப்பாளர் சிறிகாந்தா உட்பட பலர் கலந்த கொண்டனர்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா