இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/12/2012

பரத நாட்டிய அரங்கேற்றம்

(ஹனீபா)
திருக்கோவில் மகேசாஞ்சலி நர்தனாலயம் வழங்கிய பரத நாட்டிய அரங்கேற்றமும் கலைநிகழ்ச்சிகளின்; இறுதிநாள் நிகழ்வூகளும் பரிசளிப்பு நிகழ்வூம் திருக்கோவில் மத்திய மகாவித்தியாலய கலை அரங்கில் ஆசிhpயை தேவமலர் தங்கமாணிக்கம் அவர்களது தலைமையில் நேற்று முந்தினம் (10) நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிpதியாக மாகாண சபை உறுப்பினர் எம்..இராஜேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டார் இந்நிகழ்வில் மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பாளா; ஏ.எல்.தௌபீக் அவா;களும் சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் சுலோசனாதேவி இராஜேந்திரன் அவர்களும் தென்கிழக்கு பல்கலைக்கழக விhpவூரையாளர் கலாநிதி எஸ்.குணபால மற்றும் ஓய்வூ பெற்ற அழகியல் கல்விப் பணிப்பாளர் இராஜகுமாhp சிதம்பரம் ஓய்வூ பெற்ற வலயக்கல்விப் பணிப்பாளா ரீ. திலகவதி கணேசமூர்த்தி உட்பட பல அதிதிகளும் பெருந்திரளான பொது மக்களும் கலந்து சிறப்பத்தனார்

இதன்போது மாணவர்களை பயிற்றுவித்த ஆசிhpயை பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் மகாண மட்டத்தில் எழுவானில் கலை விழா போட்டியில் கலந்து 2ம் இடத்தை பெற்றமைக்கான சான்றிதழும் தேசிய மட்ட ஜதீஸ்வரம் போட்டியில் 3ம் இடத்தை பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா