இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/11/2012

கௌரவிப்பு நிகழ்வும் நுளம்புவலை வழங்கலும்


ஹனீபா

தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு தேசிய ஐக்கிய ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தால், ஊடகவியலாளர்களுக்கு நுளம்புவலை வழங்கலும் சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. 



அட்டாளைச்சேனை எம்.பி.சீ.எஸ் மண்டபத்தில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் முஹம்மட் இஸ்மாயீல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 



பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டுவருகின்ற அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு பிரிவின் கேணல் சரத் தென்னக்கோன், அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ், சர்வோதய மாவட்ட இணைப்பாளர் எம்.எம்.பைஸால் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா