இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/27/2013

இத்தாலி பொதுத் தேர்தலில் எவருக்கும் பெரும்பான்மை இல்லை

• •

இத்தாலி பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க முடியாத இழுபறி நிலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மைய இடதுசாரி கூட்டணி பாராளுமன்ற மேலவையில் சிறு இடைவெளியில் வெற்றியீட்டியுள்ளதோடு, முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் மைய வலதுசாரி கூட்டணி செனட் சபையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இத்தாலி கடுமையான சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையிலேயே அங்கு மேலும் அரசியல் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதில் மைய இடதுசாரி கூட்டணி பாராளுமன்ற கீழவையில் 29.54 வீத வாக்குகளை வென்று முன்னிலையில் உள்ளபோதும் பெர்லுஸ்கோனியின் கூட்டணி 29.18 வீத வாக்குகளை வென்றுள்ளது. ஆனால் செனட் சபையில் பெர்லுஸ்கோனியின் கூட்டணி 31.63 வீத வாக்குகளை வென்று முன்னிலை பெற்றுள்ளதோடு, மைய இடதுசாரி கூட்டணி 30.72 வீத வாக்குகளை வென்றுள்ளது
.
இந்நிலையில் இத்தாலியில் தொங்கு பாராளுமன்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதோடு விரைவில் மற்றொரு தேர்தலுக்கு முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா