இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/27/2013

நீதி மன்றத்தில் வைத்து அடிவாங்கிய விஜய் காந்த்

• •

தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது அவரது கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் மிகக் கடுமையாக அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழக அரசாங்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகுவதற்காக தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு இன்று புதன்கிழமை விஜயகாந்த் வருகை தந்தபோதே, எதிர்பாராத வகையில் அவர் மீது அடி விழுந்துள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

தமிழக அரசாங்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகுவதற்காக தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு இன்று புதன்கிழமை விஜயகாந்த் வருகை தந்தார்.

இதன்போது அங்கு கூடியிருந்த பெருமளவான தே.மு.தி.க தொண்டர்கள் விஜயகாந்த்தை சூழ்ந்து கொண்டனர். இந்த நிலையில், அவர்களை விலக்கிக் கொண்டிருந்தார் அவரது கட்சி எம்.எல்.ஏ. ஒருவர். அப்போது சில தொண்டர்களை அடிக்கவும் தொடங்கினார் அவர். 

தொண்டர்களை அடித்துக்கொண்டிருந்த அந்த எம்.எல்.ஏ. எதிர்பாராத வகையில் விஜயகாந்த் தலையிலும்; ஓங்கி ஒரு அடி அடித்தார்.  ஒரு அடி என்றாலும் மிகவும் பலமான அடியாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  

இதனைச் சற்றும் எதிர்பாராத நிலையில் அடி வாங்கிய விஜயகாந்த் ஒன்றுமே பேசாமல் 'அமைதியாக இருங்க' என மட்டும் கூறியுள்ளார்;. 

இந்த நிலையில், ஒருவழியாக கட்சி நிர்வாகிகள் விஜயகாந்தை பாதுகாப்பாக நீதிமன்றத்துக்குள்  அழைத்துச்சென்றனர்.(OI)

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா