இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/01/2013

ஹலால் தொடர்பில் வெண்டல் நிறுவனத்தின் கருத்து

• •

LM :ஹலால் சான்றிதழ் இன்றளவில் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. எங்கள் தயாரிப்புக்களில் மிருக கொழுப்பு இல்லை என நாம் ஆரம்பித்த நாள் முதலே சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சொல்லி வந்தோம். ஹலால் சான்றிதழ் மூலம் அது மேலும் உரியதாகியது. ஹலால் சான்றிதழுக்காக வியாபாரிகள் வருடத்திற்கு 175,000.00 ரூபாய் செலுத்துவதாகச் சொல்வதெல்லாம் பெரும் பொய். நாங்கள் ஒரு வருடத்திற்கே செலுத்தும் தொகை வெரும் 9000.00 ரூபாய்தான்.
எங்களிடம் அதற்கான ரசீட் பத்திரங்கள் உள்ளன. நாங்கள் உள்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு எங்கள் உற்பத்திகளை ஏற்றுமதி செய்கிறோம். சர்வதேச ரீதியாக குறிப்பாக அறபு நாடுகளில் எங்கள் உற்பத்திகளுக்கு அதிக கேள்வி உள்ளது. இதற்குக் காரணம் ஹலால் சான்றிதழ்தான். அதனால்  ஹலால் சான்றிதழ் மூலம் எங்களுக்கு நன்மையே தவிர தீமையில்லை.
 ஹலால் என்பது பொருத்தமானது என்பதாகும். ஹலால் சான்றிதழ் எங்களது உற்பத்திகள் பொருத்தமானவை என்கின்றன. ஹறாம் என்பது பொருத்தமற்றது என்பதாகும். ஹலால் இல்லை என்பது அது ஹறாம் என்பதாகும். எங்கள் தயாரிப்புக்கள் பொருத்தமற்றது. அப்படியென்றால் அதற்கு கேள்வி இருக்காது.
பொருத்தமானது என ஒரு சான்றிதழ் பெறுவதில் ஒரு தவறு ஏதும் இல்லை. அது இன வேறுபாடுகள் இன்றி எல்லோருக்கும் பொருத்தமானது.
எங்கள் உற்பத்திகளில் மிருகக் கொழுப்பு பாவிப்பதில்லை என்பது எங்கள் கொள்கையாகும். குறிப்பாக நாற்றம் அடிக்கும் பன்றிக் கொழுப்பை எங்கள் வளாகத்திற்குள் கூட எடுப்பதில்லை. எங்கள் கொள்கையை ஹலால் சான்றிதழ் உறுதிப்படுத்தினோம். சில பிஸ்கட் வகைகளில் 30 வீதமளவில் பன்றிக்கொழுப்பு உள்ளது. மாசி கூட சாப்பிடாத உபாசகம்மாக்கள் தெரியாமலேயே பன்றிக் கொழுப்பை பயன்படுத்துவதை ஹலால் சான்றிதழ் தடுக்கிறது. வைத்தியர்கள் என்றவகையில் மரக்கறி எண்ணெய் மாத்திரம் பாவிக்கும் எங்கள் நடைமுறையை அவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.
ஒரு முஸ்லிம் உட்பட பெருந்தொகையான பௌத்தர்கள் கடமை புரியும் எங்களுக்கு மத்தியில் வித்தியாசம் இல்லை. சகோதரத்துவத்தோடு கடமை புரிகிறார்கள். அவசியமின்றி சில ஹாமதுருக்கள் மூலம் ஹலால் சான்றிதழை பிரச்சினையாக்கிக்கொள்வதன் மூலம் நாங்கள் எங்களுக்கே சண்டை செய்து கொள்ளும் நிலையே உருவாகியுள்ளது.
சர்வதேச ரீதியாக எங்களுக்கு பிரயோசனமான ஹலால் சான்றிதழ் எங்கள் மதகுருக்களுக்கும் மிகவும் உகந்தது. அவர்களுக்கும் மிருகக் கொழுப்பு அடங்காத உற்பத்திப்பொருட்களை தேர்த்ந்தெடுக்க அது உதவுகிறது.
வெண்டோல் நிறுவனத்தின் 13 தயாரிப்புக்களுக்கு நாங்கள் ஹலால் சான்றிதழ் பெற்றிருக்கிறோம். அதனால்> எங்கள் பொருட்கள் பாவனைக்கு உகந்தவை. ஹலாலுக்கு எதிராக யாராவது செயற்படுவார்களாயின் அதற்கான காரணம் இனப் பிரச்சினை ஒன்றை உருவாக்குவது அல்லது பிரபல்யம் அடைவதாகத் தான் இருக்கும்.
இலங்கைப் பெண்கள் அறபு நாடுகளுக்குப் போய் சம்பாதிக்கும் பணம் ஹலால், ஆனாலும் ஹலால் ஹறாம். இன்று முஸ்லிம்கள் ஹலால் இல்லாததன் காரணமாக பொருட்களை வாங்குவதில்லை. சிங்ககளவர்கள் ஹலால் சான்றிதழ் இருப்பதன் காரணமாக பொருட்களை வாங்குவதில்லை. ஹலால் சான்றிதழ் பெருவதற்காக ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் ஒப்படைக்கத் தாமதமானாலும், நாங்கள் அதற்காக விண்ணப்பித்திருக்கிறோம்.
ஆவணங்கள் ஒப்படைக்கத் தாமதமானதால் இம்முறை எங்களுக்கு 15 மில்லியன் நட்டமேற்பட்டுள்ளது. வெண்டோல் உற்பத்திகளில் ஹலால் இல்லாததன் காரணமாக முஸ்லிம்கள் வாங்குவதில்லை. சில ஹாமதுருமார் ஹலால் சான்றிதழை நிறுத்த நாள் குறிக்கிறார்கள். இது இப்படித் தொடர்ந்தால் எனது நிறுவனம் நட்டமடைவதால் 200 தொழிலாளர்களை விலக்க நேரிடும். மத்திய கிழக்கு நாடுகளில் அதிகம் பாவிப்பது வெனிவெல் தயாரிப்புக்கள். இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லும் பெண்கள் அதிகம் கொண்டு செல்வது வெனிவெல் தயாரிப்புக்களை. ஹலால் சான்றிதழை நிறுத்த முடியாது. நாங்கள் அதனை நிறுத்த மாட்டோம். கிணற்றுத் தவளைகள் போன்று வாழ எம்மால் முடியாது. எங்கள் உற்பத்திகளை இலங்கையில் போன்று சர்வதேசத்திலும் சந்தைப் படுத்த வேண்டும். ISS சான்றிதழ் பெற நாங்கள் 150,000 ரூபா செலுத்தினோம். அவ்வளவு செலுத்தி அந்த சான்றிதழை நாங்கள் பெறுவது எங்கள் வியாபாரத்திற்கு நலவு பயப்பதால்தான். பொது பல சேனா இன்னும் வியாபாரிகளிடம் இது பற்றி பேசவே இல்லை.
நாங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். வியாபாரத்தில் ஈடுபடுவது வியாபாரிகளே. இப்படிச் சென்றால் மத்திய கிழக்கிற்குப் போய் முஸ்லிம்களுக்குப் பணிவிடை செய்யும் பெண்களை அதிகப்படுத்தவே தவிர வேறில்லை.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா