இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/12/2013

சீனி உற்பத்தி; அதிகரிப்பு தொடர்பான உயர்மட்டக் கூட்டம்

-ஹனீபா-
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் சீனி உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு அதற்கான பிரதான மூலப் பொருளான கரும்பு உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான உயர்மட்டக் கூட்டம் (11.03.2013) அம்பாறை மாவட்ட செயலகத்தில் சீனி உற்பத்தித்துறை அமைச்சர் லக்ஷ;மன் செனவிரத்ன தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர் இங்கு கருத்து தெரிவிக்கையில் எமத நாட்டில் தற்போது 6 வீதமான சீனியே உற்பத்தி செய்யப்படுகின்றது ஏனைய 94 வீதமான சீனியும் வெளிநாட்டிலிருந்த இறக்குமதி செய்யப்பட்டுவருகின்றது இதனால் எமது நாட்டின் வளங்கள் பயன்படத்தப்படாமலுள்ளது.

இதனை நிவர்த்தி செய்யும் முகமாகவே ஜனாதிபதி அவர்கள் அவருடைய மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டதற்கு அமைவாக 50 வீதமான சீனியினை எமது நாட்டில் உற்பத்தி செய்யப்பட வெண்டும் எனக் கூறப்பட்டுள்ளதுடன் அதனை துரிதமாக நடைமுறைப்படத்தும் முகமாக அதற்காக தனியானதொரு அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளளது எனவும் அமைச்சர் செனவிரத்ன தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திலும் கரும்பு உற்பத்தியினை அதிகரிக்கச் செய்யவேண்டும் அத்துடன் இங்க பாரிய சீனித் தொழிற்சாலை உள்ளது அதனுடாக கூடுதலான உற்பத்திகளைப் பெறவேண்டும் எனவும் கூறி;னார்.

இவ் உயர்மட்டக் கூட்டத்தில்உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா,சிரேஷ;ட அமைச்சர் பி.தயரத்ன,மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை,பாராளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜயவிக்ரம, அமைச்சின் செயலாளர்கள் மேலதிக அரசாங்க அதிபர் அசங்க அபேவர்த்தன உட்பட பிரதேச செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள்.மாநகர,நகர.மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள்.தனியார் கம்பனிகளின் உரிமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா