இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாடசாலையொன்றில் பரீட்சை மண்டபத்தில் மாணவியொருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து தெரியவருவது, உத்தரபிரதேச மாநிலம் அசம்கார் மாவட்டம் சதியவ் என்ற இடத்தில் உத்தரபிரதேச மாநில அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தது. இந்த பள்ளியில் பூனம் ஷானி என்ற மாணவியும் சமஸ்கிருத தேர்வு எழுத வந்துள்ளார்.அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவரது வயது 20. பூனம் தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறையில் இருந்த பூனம் மேற்பார்வையாளரிடம் தெரிவித்துள்ளார். அவர் எம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் அங்கு எம்புலன்ஸ் வந்துள்ளது. எனினும் அதற்கு முன்னரே அந்த மாணவிக்கும் பரீட்சை அறியிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் குழந்தையும், தாயும் அந்த எம்புலன்ஸ் மூலம் மாவட்ட வைத்தியசாலைகு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment