இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/04/2013

தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் விற்பனைச் சந்தை

(ஹனீபா)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு சம்மாந்துறைப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள திவிநெகும விற்பனைச் சந்தை  தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (03) மாலை சம்மாந்துறைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சமுர்த்தி மற்றும் திவிநெகும திட்டத்தின் கீழ் செய்கை பன்னப்பட்ட உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுத்தல், தமிழ் சிங்கள புதுவருடத்தை கொண்டாடும் மக்களுக்கு தேவையான பொருட்களை சலுகை விலையில் பெற்றுக் கொடுத்தல், சமுர்த்தி மற்றும் திவி நெகும சேமிப்பு வேலைத்திட்டங்களை செயற்படுத்தல் போன்ற நோக்குடன் ஏற்படுத்தப்படவுள்ள இந்த விற்பனைச் சந்தை நிகழ்வில் பல்வேறு அரச திணைக்களங்கள் மற்றும் அதிகார சபைகள் போன்றவற்றின் சேவைகள் பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக  ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட், உதவி பிரதேச செயலாளர் அப்துல் லத்தீப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், பட்டதாரி பயிலுனர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தீர்மானத்துக்கு அமைவாக இவ்விற்பனைச் சந்தை எதிர்வரம் 10,11ம் திகதிகளில் சம்மாந்துறை மல்வத்தை விபுலானந்தா மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா