இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/05/2013

GCE O/L பரீட்சையில் மகன் சித்தியடையாததால் தந்தை தூக்கில்-ஹட்டனில் சம்பவம்

• •
ஹட்டன் - வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல பகுதியில் தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (05) காலை இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வெளியான க.பொ.த. சா/த பரீட்சை பெறுபேறுகள்படி தனது மகன் சித்தியடையாமை காரணமாக வீட்டில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனவிரக்தி அடைந்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வட்டவளை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

சடலம் தற்போது வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதை வட்டவளை வைத்தியசாலை வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

மரணம் குறித்த நீதவான் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
Bas AD

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா