இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/13/2013

சம்மாந்துறையில் மீள் எழுச்சி வேலைத்திட்டம்


(ஹனீபா)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் மூன்று வகையான அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தி வருகின்றது வாழ்வாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி,மற்றும் திறன் அபிவிருத்த வேலைத்திட்டம் ஆகிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை, கூட்டுறவுத்துறை மகளிர்விவகார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித் திட்ட வேலைத்திட்டத்தின் கீழ் கிராமப்புர மக்களின் திறன்களை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் சம்மாந்துறை சென்னல் கிராமம்-02ம் பிரிவில் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் எம்.எல்.நியாஸ் தலைமையில் (11.06.2013) செவ்வாய்க்கிழமை மலை 4.30 மணிக்கு சென்னல் கிராமம் ஹிஜ்றா வித்தியாலயத்தின் அப்துல் ஹகாம் திறந்த வெளி அரங்கில் நடைபெற்ற அங்குரார்ப்பண கலை, கலாசார நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்த கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்ததார்.

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிந்தனைக்கு அமைவாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷPல் ராஜபக்ஷ அவர்களினால் இன்று நாடளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான அபிவிருத்தி வெலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் மீள் எழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் 57 பிரதேசங்களில் இவ்வாரான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றன அவற்றில் ஒன்றாக  சென்னல் கிராம் தெரிவு செய்யப்பட்டு இன்று இந்த விழா சிறப்பாக நடைபெறுவதையிட்டு நாம் பெருமையடைகின்றோம்.

இந்த வேலைத்திட்டம் நான் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளராக இருக்கின்ற போது இந்தப் பிரதேசத்தை இத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்காக சிபார்சு செய்யக் கிடைத்தது அதன் பிரகாரம் இன்று மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் பல வகையான அபிவிருத்திகள் நடைமுறைப்படுத்தப்பட்டடு வருகின்றன.

நான் இந்தப் பிரதேசத்தின் தவிசாளராக இருக்கும் போது பல வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்களை முன்னேடுத்துள்ளோன் இன்று இப்பிரதேச மக்களுடைய ஆதரவுடன் கிழக்க மாகாண சபையின் ஒரு அமைச்சராக நியமிக்கப்பட்டள்ளேன்.

அவ்வாறு எனக்கு உங்கள் மூலமாக கிடைக்கப்பபெற்ற அமானிதத்தைக் கொண்டு எதிர் காலத்திலும் பலவகையிலும் இப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்து அழகுபார்க்கவுள்ளேன் அதற்கு உங்களுடைய பூரண ஒத்துழைப்பை வழங்க வெண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு புஷ;பகுமார, பொறியியலாளர் நிலாணி,அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.ஜஹூபீர், திட்ட உத்தியோகத்தர்களான முனவ்வர், அஜ்மல், பிரதேச சபை உறுப்பினர் பீ.எம்.றியால், பாடசாலை அதிபர் ஏ.ஏ.அமீர், பிரதி அதிபர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா