இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/06/2013

மகள் காதலனுடன் ஓடிச் சென்றதால் தாய் தற்கொலை


தான் பெற்ற மகள் காதலனுடன் ஓடிச் சென்று பதிவுத்திருமணம் செய்ததை அறிந்த தாய் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவமானதுயாழ்-வல்வெட்டித்துறைப்பகுயில் இடம்பெற்றுள்ளது.

21 வயதுடைய தனது ஒரே மகள் 19 வயதுடைய காதலனுடன் ஓடிச் சென்றதைத் தாங்க முடியாத தாய் தன்னை தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த குறித்த பெண்ணின் தந்தை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தான் இறந்துள்ளார். அவ்வாறு இருக்கையில் மகளின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொண்டிருக்கையில் மகள் தனது 19 வயதுக் காதலனுடன் ஓடிச் சென்றுள்ளார்.

தீ மூட்டி உயிரிழந்த தாயின் சடலம் மந்திகை வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா