அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை காலை 8மணி முதல் மாலை 5மணி வரை மின் வெட்டு அமுல்படுத்தப்படும்.
அம்பாறை உபமின் நிலையத்தின் திருத்தப்பணி காரணமாக அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு ஆகிய பிரதேசசெயலகப் பிரிவுக்;குட்பட்ட பிரதேசங்களிலே இவ் மின் விநியோகத்தடை அமுலில் இருக்கும் என கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் தெரிவித்தார்.
இதேவேளை இப்பிரதேசங்களில் கடந்த 3 நாட்களாக எவ்வித முன்னறிவித்தலுமின்றி அடிக்கடி மின் விநியோகத்தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Bas TM
0 comments:
Post a Comment