சிரியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் குயிசாயரை அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் அசாத் ஆதரவுப் படையினர் மீளக் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 3 வார கடும் மோதலையடுத்து இந்நகர் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் சிரிய மோதலில் அசாத் ஆரதரவுப் படையினரின் கை மீளவும் ஓங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஒரு வருடமாக கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த குயிசாயரை அரச ஆதரவுப் படைகள் வசம் வந்துள்ளமையை அந்நாட்டு தேசிய தொலைக்காட்சிச் சேவை அறிவித்துள்ளது.
லெபானை ஒட்டிய எல்லையோர நகரான குயிசாயரைக் கைப்பற்ற அந்நாட்டு ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் அசாத் ஆதரவுப் படையினருக்கு பெருமளவில் உதவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை திடீரென தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும் இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத கிளர்ச்சியாளர் நகரை விட்டு தப்பியோடி விட்டதாகவும் ஹிஸ்புல்லா போராளியொருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 மாதங்களில் அசாத் ஆதரவுப் படையினர் தொடர்ச்சியாக முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.
இதேவேளை அரச படைகளானது விஷ வாயுவைப் பிரயோகித்துள்ளதாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகியன குற்றஞ்சாட்டியுள்ளன.
இது தொடர்பிலும் படங்களும் சிலவு வெளியாகியுள்ளன.
0 comments:
Post a Comment