மறைந்த பொப் பாடகர் மைக்கல் ஜக்சனின் மகள் பாரிஸ் ஜக்சன் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதையடுத்து, உடலில் பலத்த காயங்களுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த பிரபல பொப் பாடகர் மைக்கல் ஜக்சனின் மகள் பாரிஸ் ஜக்சன்(15); நேற்று தனது கையை கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதைப் பார்த்த அவர் குடும்பத்தினர் அவரை லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் விரைவில் நலமாகிவிடுவார் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
நேற்று முன்தினம் அவர் தனது டுவிட்டரில், கண்ணீர் ஏன் உப்பாக இருக்கிறது? என் துன்பங்கள் எல்லாம் வெகு தூரம் சென்றது போன்று உள்ளது. அவை எல்லாம் இங்கே இருக்க வந்தது போன்று தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
மைக்கல் ஜக்சன் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் இறந்தார். அவருக்கு பிரின்ஸ், பாரிஸ் மற்றும் பிளாங்கெட் ஆகிய 3 குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment