இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/17/2013

CID அதிகாரிகள் என கூறி பண மோசடி: பொலிஸார் மக்களுக்கு எச்சரிக்கை


தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி பண மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இவ்விடயம் தொடர்பாக அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்தின சிறிவர்தன தெரிவித்தார். 

மோசடியில் ஈடுபடுபவர்கள் வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்களை தொடர்பு கொண்டு, உங்களுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது எனவும் அவ்விடயம் தொடர்பான விசாரணைகளை நிறுத்துவதற்கு பணம் தருமாறும் கோருவதாக புத்தின சிறிவர்தன தெரிவித்தார். 

அழைப்பை ஏற்படுத்துபவர்கள் தம்மை குற்றத்தடுப்பு திணைக்களத்திலுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், குற்ற புலனாய்வு பிரிவினர் அல்லது பொலிஸ் நிலையங்களிலிருந்து பேசுவதாக அடையாளப்படுத்துவதாக பொலிஸார் சுட்டிக் காட்டினர். 

இதன்போது அச்சமடைந்தவர்கள் அவர்களுக்கு பணம் கொடுப்பதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்வதில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

பண மோசடியில் ஈடுபடுவோர் தொடர்பில் 0112 - 422 176, 0112-321 839, 0112 - 685 151, 0112 - 444 480 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்ய முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை www.police.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று TELL IGP என்ற பகுதியிலும் முறைப்பாடு செய்ய முடியும்.
Bas AD

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா