இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/13/2013

அனர்த்தங்கள் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீடமைப்புக் காசோலைகள், கூரைத்தகடுகள் வழங்கும் நிகழ்வு

(ஹனீபா)
அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மூலம் அம்பாறை மாவட்டத்தில் கடந்த கால அனர்த்தங்கள் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீடமைப்புக் காசோலைகள், கூரைத்தகடுகள் வழங்கல் மற்றும் அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள் என்பவற்றுக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (13) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலாளர் நீல் டி அல்வீஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, பைஷhல் காசீம், சட்டத்தரணி சிறியாணி விஜேவிக்ரம, பி.எச்.பியசேன, மாகாண சபை உறுப்பினர் வீரசிங்;க, மேலதிக மாவட்ட செயலாளர் கே.விமலநாதன் உட்பட அமைச்சர்களின் இணைப்பாளர்கள் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த வைபவத்தின் போது 108 குடும்பங்களுக்க வீடமைப்பதற்கான சாசோலைகளும், 3900 கூரைத்தகடுகளும், 40 நிறுவனங்களுக்கு அனர்த்த காலத்தின் போது சமைப்பதற்கான சமையல் பாத்திரத் தொகுதிகள் என்பன அமைச்சரினால் இன்று வழங்கி வைக்கப்பட்டன.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா