இன்று துல்ஹஜ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதாக நாட்டின் எப்பகுதியில் இருந்தும் தகவல் கிடைக்காததினால் துல்கஃதா மாதத்தினை 30 ஆக பூர்த்தி செய்து, நாளை மறுநாள் (07 திங்கள்கிழமை) முதல் துல்ஹஜ் மாதத்தின் முதல் நாள் ஆரம்பமாகும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் எதிர்வரும் 15 ம் திகதி (செவ்வாய்கிழமை) அரபா நோன்பு நோற்க வேண்டும். 16 ம் திகதி (புதன்கிழமை) புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட வேண்டிய நாளாகும்.என ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.
இதே வேளை அகில இலங்கை சமயத்துள் உலமா இன்று 6ஆம் திகதி பிறை பார்க்க உள்ளது

0 comments:
Post a Comment