(ஹனீபா)
கல்முனை நகர லயன்ஸ் கழகத்தினால் ஏற்பாட்டில் பாண்டிருப்பு பொது நூலகத்தின் தேவைக்கு பல் வேறு விடயங்கள் அடங்கிய 100 புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு நேற்று (17) மாலை நடைபெற்றது.
கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் எஸ்.சிறிரங்கன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் லயன்ஸ் 306 சீ 2 மாவட்டத்தின் ஜீ.எல்.ரீ உறுப்பினர் லயன்; எம்.வை.ஏ.சக்கூர், பிராந்திய தலைவர் லயன் எஸ்.தைரியராஜா, வலயத் தலைவர் லயன் கே.பென்னம்பலம், கழக செயலாளர் ஹனீபா உட்பட பல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய வாசிப்பு மாதத்தையிட்டு; இப்பிரதேச மக்களின் தேவைகளை அறிந்தே இந்தப் இப்புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக லயன்ஸ் கலகத்தின் தலைவர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment