இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/18/2013

சம்மாந்துறையில் முதியோர் கௌரவிப்பு விழா

(ஹனீபா)
முதியோர்களுக்கான தேசிய செயலகம், சம்மாந்துறைப் பிரதேச செயலகம், கிராம அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடாத்தும் சம்மாந்துறைப் பிரதேச முதியோர் கௌரவிப்பு விழா இன்று (18) காலை 10.30 மணிக்கு சம்மாந்துறைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை சமூக சேவைகள் விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கலந்து கொண்டார்.

கௌரவ அதீதிகளாக சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.அப்துல் லத்தீப், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சஹூபீர், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சம்சுதீன், முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.மகேஷ;வரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சரீப் முஹம்மட் உட்பட கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த வைபவத்தில் சம்மாந்துறைப் பிரதேசத்திற்கு உட்பட்ட 125 முதியோர்கள் பாராட்டப்பட்டு நினைவுப் பரிசில்களும் அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா