இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/06/2013

திராசாதில் இஸ்லாமிய்யா அரபுக் கலாசாலையினால் ஏற்பாடு செய்யப்ப்டட புதுவருட சிறப்பு நிகழ்வு

(ஹனீபா)
இஸ்லாமிய புதுவருடம்; ஹிஜ்ரி 1435 முஹர்ரம் சிறப்பு தினத்தையிட்டு சம்மாந்துறை திராசாதில் இஸ்லாமிய்யா அரபுக் கலாசாலையினால் ஏற்பாடு செய்யப்ப்டட புதுவருட சிறப்பு நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவமும்; நேற்று (05) மாலை கலாசாலை மண்டபத்தில் அதிபர் மௌலவி கே.எம்.கே.றம்ஸீன் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் கலந்து கொண்டார். 

கௌரவ அதீதிகளாக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையில் புதிய பிரதம நம்பிக்கையாளர் டாக்டர் எம்.வை.எம்.முஸ்தபா, ஜனாதிபதி கூட்டிணைப்பு உத்தியோகத்தர்களான எம்.எம்.ஏ.காதர், எம்.எல்.ஏ.மஜீட், ஜம்இய்யதுல் உலமா சபையின் செயலாளரும் மத்தியஸ்த சபையின் தவிசாளருமான மௌலவி எம்.ஐ.அச்சுமுஹம்மட் உட்பட உலமாக்கள் விரிவுரையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த வைபவத்தின்போது அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற அஹதிய்யா பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.





0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா