நிந்தவூரில் பெதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட பிரட்சினைக்கு தொடர்பாக மக்களை தெளிவு படுத்தும் கூட்டம் 17.11.2013 அன்று சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தால், நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
பாராளமண்ற உறுப்பினர் பைசல் காசீம் தலைமையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஏ.கே.தகனக,காரைதீவு இராணுவப் பொறுப்பதிகாரி,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரனி ஆரிப் சம்சுதீன், உட்பட பிரதேச செயலாளர்கள்,கிராம சேவகர்கள் மற்றும் விழிப்புக் குழு அங்கத்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அண்மைக்காலமாக நிந்தவூர் பிரதேசத்தில் இடம் பெற்று வரும் அசம்பவிதங்கள் குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்த போது பொது மக்கள், விழிப்புக்குழுக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து இனிவரும் காலங்களில் பிரட்சினைக்கு தீர்வுகாணுவதாகவும், இரவு நேரங்களில் சிவில் பாதுகாப்பு குழுவினரோடு இணைந்து பொலிஸாரும் பள்ளி நிர்வாகத்தினரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் எனவும், இரவு வேளைகளில் சந்தேகத்துக்கு இடமளிக்கக்கூடிய வகையில் யாரவது நடமாடினால் பொலிஸாருக்கோ அல்லது பள்ளி நிர்வாகத்திற்கோ அறியத்தற வேண்டும் எனவும், ஒவ்வொரும் தங்கள் அடையாளத்தை உறுதிகப்படுத்த தேசிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் எனவும் தீர்மாணம் மேற்கொள்ளப்பட்டது.




0 comments:
Post a Comment