அமெரிக்காவில் சியோனிச சக்திகளினால் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை கண்டித்து இன்று (21) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின் நாடு பூராகவும் கண்டன ஆர்பாட்டங்கள் இடம்பெறுள்ளது என்று எமது பிராந்திய செய்தியாளர்கள் மூலம் அறிய முடிகிறது .
இணைப்பு-1 மாத்தளை
அஸ்லம் அலி: மாத்தளையில் மிகப் பிரமாண்டமான ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. மாத்தளையில் இது காலவரை இடம்பெற்ற ஆர்பாட்டங்களில் மிக பாரிய ஆர்பாட்டமாக இது உள்ளது .
மாத்தளை நகரல் உள்ள நான்கு ஜும்ஆ மஸ்ஜித் முஸ்லிம்களும் ஒன்று கூடி மிகப் பிரமாண்டமான ஆர்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர் .இதில் பத்தாயிரம் வரையான முஸ்லிம்கள் கந்துகொண்டுள்ளனர் . மாத்தளை நகரம் இன்று அல்லாஹு அக்கபர் என்ற முழக்கத்தினால் அதிர்ந்தது.
அக்குரணை, கண்டி, மாவனல்லை, கேகாலை ஆகிய பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெற்றுள்ளது. அக்குரணையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணி பாரிய அளவில் இடம்பெற்றுள்ளது . கண்டி ,மாத்தளை ஆகிய மாவட்டங்களுடன் ஆர்ப்பாட்ட பேரணிகளை ஒப்பிட்டி நோக்கும்போது மாத்தளையில் இடம்பெற்ற பேரணி மிக பிரமாண்டமாக இருந்தது. தொழில் நுட்பகோளாறு காரணமாக படங்கள் உடடியாக பதிவு செய்யமுடியவில்லை பின்னர் பதிவு செய்யப்படும்.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கருப்பு லாஹிலாக இல்லல்லாஹ் முஹம்மதுன் ரசூலில்லாஹ் என்ற இஸ்லாமிய கொள்கைப் பிரகடனம் பொறிக்கப் பட்ட கருப்பு வெள்ளை இஸ்லாமிய கொடியுடனும் , தேசிய கொடியுடனும் முஸ்லிம்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். பேரணியில் அதிகமான இஸ்லாமிய கொடியுடன் பேரணியில் கலந்துகொண்டனர்
இணைப்பு-2-கல்முனை
எஸ்.அஸ்ரப்கான்: முழு மனித சமூதாயத்திற்குமான இறுதித்தூதரையும், இஸ்லாத்தையும் இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் சியோனிச சக்திகளினால் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை கண்டித்து இன்று (21) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின் நாடு பூராகவும் கண்டன அமைதி ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும், இடம்பெற்றதுடன், ஹர்த்தாலும் அனுஸ்டிக்கப்பட்டது.
கல்முனை பிரதேசத்தில் கல்முனை அணைத்துப்பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் கண்டனப்பேரணி இன்று ஜூம்ஆ தொழுகையின் பின் பிரதான வீதியினாடாகச் சென்று கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபலிடம் கண்டன அறிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் கல்முனை அணைத்துப்பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் வைத்தியர் எம். அஸீஸ் அவர்களால் கையளிக்கப்பட்டதுடன், இந்த அமைதி ஆர்ப்பாட்டப்பேரணியில் கலந்து கொண்டோர் கலைந்து சென்றனர். இந்த மிக பிரமாண்டமான ஆர்ப்பாட்டப்பேரணியில் கல்முனைப் பிரதேச வாழ் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கு கொண்டனர். அத்துடன் கொடுங்கோலர்களுக்கு எதிராக துஆப் பிரார்த்தனையும் அங்கு இடம்பெற்றது.
இணைப்பு-3-கொழும்பு
இஹ்சான் பறீன்: இர்ஷாத்: கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜூம்ஆ பள்ளியில் ஜூம்ஆ தொழுகையின் பின்னர் ஆரம்பித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெருந்திகையானவர்கள் கலந்து கொண்டனர் அமெரிக்க தூதுவரகத்தை நோக்கி நகர்ந்த குறித்த ஆர்ப்பாட்டம் தூதரகத்துக்கு முன்னர் பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இணைப்பு-4- புத்தளம் கற்பிட்டி
M.B.முஹம்மட் அர்ஷத்: அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமெரிக்காவின் இஸ்லாமிய விரோத செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கற்பிட்டி அனைத்து ஜும்மா பள்ளிவாசல்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய ஜும்மா தொழுகையின் பின்னர் மாபெரும் கண்டனபேரணியும் ஆர்ப்பாட்டமும் இடம் பெற்றது.கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அமெரிக்க அதிபர் பரக் ஒபாமாவின் கொடும்பாவியும் தீயிடப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.இதுவே கற்பிட்டி வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாகும். இதற்காக பொலிசாரும் பூரண ஒத்துழைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இணைப்பு-5-மூதூர்
எஸ்.எச்.அமீர் :நபிகளாரை அவமதித்து எடுக்கப்ட்ட படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வெள்ளிளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து மூதூரில் மாபெரும் கண்டனப் பேரணி இடம்பெற்றதோடு மூதூர் பொது மைதானத்தில் கண்டனக் கூட்டமும் இடம்பெற்றது. மூதூர் பள்ளிவாசல்கள் சம்மேளனம், கதீப்மார்கள் சம்மேளனம் மற்றும் மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நபிகளாரை அவமதித்து எடுக்கப்ட்ட படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வெள்ளிளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து மூதூரில் மாபெரும் கண்டனப் பேரணி இடம்பெற்றதோடு மூதூர் பொது மைதானத்தில் கண்டனக் கூட்டமும் இடம்பெற்றது.
இணைப்பு-6-ஓட்டமாவடி
எம்.ரீ.எம்.பாரிஸ்: நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப் படத்துக்கு எதிர்ப்பு தெருவித்தும் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை 21.09.2012 ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து கல்குடா தொகுதியின் அனைத்து ஜூம்ஆ பள்ளி வாயலில் இருந்து பேரனியாக ஓட்டமாவடி பிரதான வீதியை அடைந்து ஒரணியாக ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானதில் ஒன்று கூடி அமெரிக்காவுக்கு எதிராக பிரனை மற்றும் கோஷங்கள் எழுப்பபட்டதோடு அமெரிக்கா ஜனாதிபதியின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டது.
இன்று கல்குடா தொகுதி பூரன ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அரச காரியாலயங்கள், பாடசாலைகள், தொழில்பேட்டைகள் மூடப்பட்டுள்ளதோடு இன்றைய கர்த்தாலை கல்குடா உலமா சபை ,பள்ளிவாயல்களின் நிருவாகங்கள் ,வர்த்தக சங்கம்,சமூக சேவை நிருவனங்கள் இளைஞசர் கழகங்கள் ஒன்றினைத்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடதக்கதாகும்.
இணைப்பு-7-நிதவூர்
சஹீத் அஹமட் : நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப் படத்துக்கு எதிர்ப்பு தெருவித்தும் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை 21.09.2012 ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து நிதவூர் ஜூம்ஆ பெரிய பள்ளி வாயலில் இருந்து பேரணி புறப்பட்டு நகரை சுற்றி வந்தது.
இணைப்பு-8-காத்தான்குடி
முழு மனித சமூதாயத்திற்குமான இறுதித்தூதரையும், இஸ்லாத்தையும் இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் சியோனிச சக்திகளினால் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை கண்டித்து இன்று (21) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின் காத்தான்குடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்.
இணைப்பு-9-பேருவளை
எம் .சப்fறான்: முழு மனித சமூதாயத்திற்குமான இறுதித்தூதரையும், இஸ்லாத்தையும் இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் சியோனிச சக்திகளினால் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை கண்டித்து இன்று (21) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின் பேருவளையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்.
இணைப்பு-10-புத்தளம்
T.முஜாஹித்: முழு மனித சமூதாயத்திற்குமான இறுதித்தூதரையும், இஸ்லாத்தையும் இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் சியோனிச சக்திகளினால் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை கண்டித்து இன்று (21) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின் புத்தளத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்.
இணைப்பு-11- மடவளை
முழு மனித சமூதாயத்திற்குமான இறுதித்தூதரையும், இஸ்லாத்தையும் இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் சியோனிச சக்திகளினால் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை கண்டித்து இன்று (21) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின் மடவளைல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்.
இணைப்பு-11- மடவளை
முழு மனித சமூதாயத்திற்குமான இறுதித்தூதரையும், இஸ்லாத்தையும் இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் சியோனிச சக்திகளினால் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை கண்டித்து இன்று (21) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின் மடவளைல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்.
Thanks to Lanka muslim









































0 comments:
Post a Comment