(ஹனீபா)
மஹிந்த சிந்தனையின் 1000 இடைநிலைப் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை மத்திய மகாவித்தியாலய தேசிய பாடசாலையில் “பல்லுர்டக ஆய்வு கூடத்துக்கான” அடிக்கல் நடும் விழா இன்று (23) கலை பாடசாலை அதிபா; எஸ்.அபூபக்கர் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதம அதிதியாக சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார,சுதேச வைத்திய, சிறுவா; நலன்,மகளிர் விவகாரம், உணவு வழங்கள், கூட்டுறவு விளையாட்டுத்துறை அமைச்சா; எம்.ஐ.எம்.மன்சூர் கலந்து கொண்டதுடன் விN~ட அதிதிகளாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணியகத்தின் பொறியியலாளா; நவாஸ் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் i.ஏ.றசூல்.சுகாதார அமைச்சரின் பிரத்தியோக செயலாளா; சட்டத்தரணி எம்.எம்.ஜஹூபீர் உட்பட ஊர்பிரமுகர்ள்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அதிதிகளால் தேசிய மற்றும் மாகாண கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதுடன் கட்டிடத்துக்கான அடிக்கல்லும் நடப்பட்டன. அதனைத் தொடர்ந்த பாடசாலை மாணவர்களின் மேடை நிகழ்வுகளும் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment