பண்டாரவளை - பூநாகலை பகுதி தமிழ் பாடசாலை ஒன்றின் ஆண் மாணவர்கள் சிலரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பூநாகலை பகுதி பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 6-8ம் வகுப்பு ஆண் மாணவர்கள் சிலரை குறித்த ஆசிரியர் 2011ம் ஆண்டு இறுதியில் இருந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து
குறித்த ஆசிரியர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டு பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியரை எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை குறிப்பிட்ட ஆசிரியர் பூனாகலை பிரதேச சபை உபதலைவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment