ஹஜ் கடமைகளின்போது பாகிஸ்தான் பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துள்ளார். ஹஜ் கடமையில் ஈடுபட்டிருந்த போது குறித்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து மினாவிலுள்ள மினா அல் வாடி வைத்திய சாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து தாஹிரா யஸ்மின் என்ற குறித்த பெண் சுகப் பிரசவம் மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்துள்ளதாக வைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணரான ஹம்சா அல் சலமோனி தெரிவித்தார்.
பிரசவிக்கப் பட்ட இரு குழந்தைகளுக்கும் சபா, மர்வா என பெயரிடப் பட்டுள்ளதாக குறித்த குழந்தைகளின் தந்தையான முஹம்மத் மஹ்மூத் தெரிவித்தார். தற்போது இக்குழந்தைகள் இரண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment