அமெரிக்கத் தூதர் மிச்சல் சிசன் தனது கிழக்கு மாகாண விஜயத்தின் ஒரு கட்டமாக இன்று புதன்கிழமை ஏறாவூருக்கு வருகை தந்தார்.
கிழக்கு மாகாண விவசாய, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோரடங்கிய குழுவினரும் பொது மக்களும் அமெரிக்கத் தூதரை வரவேற்றனர்.
இதன் போது பொதுமக்களின் குறைநிறைகள் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் என்பனவற்றை அமைச்சர்கள் அமெரிக்கத் தூதரிடம் எடுத்து விளக்கினர்.
0 comments:
Post a Comment